யார் இந்த சித்தர்?

💥மஹாராஜாவாக இருந்து சித்தராக மாறிய சித்தர்:

    உஜ்ஜினி ராஜாவாக வாழ்ந்து அரச பதவியை துறந்து திருவிடைமருதூர் ஆலயத்தில் மஹாலிங்கேஸ்வரரை தினமும் வணங்கி  பிச்சை எடுத்து வாழ்ந்தவர் சித்தர் பத்திரிகிரியார் ஆவார்.

     இவர் சாப்பிட்ட பின் எஞ்சிய உணவை  ஒரு நாயிக்கு அளித்து வந்தார்.

     அந்த நாய் எப்போதும் அவருடன் இருந்து. 

      பத்திரகிரியாரின் குருவான பட்டினத்தார் இதனால் இவரை குடும்பஸ்தன் என்று கூறிகிறார்.

        துறவியான தன்னைத் தன் குரு குடும்பஸ்தன் என்று குறிப்பிட்டதற்கு காரணம், தன்னிடம் இருந்த திருவோடும் தான் வளர்க்கும் நாயும் தான் என்பதை பத்திரகிரியார் உணர்ந்தார். 

         மன வேதனையில் அவர் தன் திருவோட்டைத் தூக்கி எறிய, அது எதிர்பாராதவிதமாக அந்த நாயின் மீது பட்டு நாய் உயிர் இழக்கிறது.

         பத்திரகிரியாரின் எச்சில் உணவை உண்டு, அவர் அருகிலேயே வாழ்ந்த புண்ணியத்தால், அந்த நாய் அடுத்த பிறவியில் காசி மன்னனின் மகளாகப்  பிறந்தது. 

     அவள் வளர்ந்து திருமணப் பருவத்தை எட்டியபோது, தன் முற்பிறவி நினைவு வர       “நான் திருவிடைமருதூர் கோபுர வாசலில் இருக்கும் தவ முனிவருக்கே உரியவள்” என்று கூறி, தன் தந்தையுடன் திருவிடைமருதூர் வருகிறாள்.

      பத்திரகிரியாரை வணங்கிய காசி இளவரசி, “தங்கள் அளித்த உணவை உண்ட  எனக்கு இந்த மறுபிறவி ஏன்? எனக்கு முக்தி நிலை கிடைக்காதா?” என்று முறையிடுகிறாள்.

      பத்திரகிரியார், அவளைத் தன் குருவான பட்டினத்தாரிடம் அழைத்துச் சென்று, “குருவின் எச்சில் உணவை உண்ட நாய்க்கு மறுபிறவி என்ற இழிநிலை வரலாமா? 

      எங்களுக்கு முக்தி இல்லையா?

 என்று வேண்டினார். பட்டினத்தார்  சிவபெருமானை தியானிக்க பேரொளி ஓன்று அங்கு தோன்றியது. அந்தப் பேரொளியில் பத்திரகிரியாரும் காசி இளவரசியும் மறைந்து  விடுகிறார்கள்.

         இவர் இயற்றிய மெய்ஞானபுலம்பல் என்ற பாடல் புகழ்பெற்றது.

    திருவிடைமருதூர் ஆலயத்தில் மேற்கு கோபுரவாசலில் இன்றும் பக்தர்களுக்கு

பத்திரகிரியார் அருள்பாளிக்கிறார்.

       பத்திரகிரியாரை தரிசனம் செய்து பலன்பெறுங்கள்.

💥பிரசன்னம் பார்க்கவும்

💥தீர்வைபெறவும்

#Raajalu

9384760464

#பத்திரகிரியார் #திருவிடைமருதூர்

#சித்தர்   #ஜோதிடம் #ஆன்மீகம்

Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *